வக்பு சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இஸ்லாமியர்கள் தங்களது சொத்துக்களை கொடையாக கொடுத்ததே வக்பு சொத்துக்கள்.
அது ஏழைகளுக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற கோட்பாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும்.
அதனை வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியாது.
அது அல்லாவுக்கே சொந்தமாகும்.
வக்பு வாரிய சொத்துக்களை அரசு அதிகாரிகள் நிர்வகிக்கும் முறையை கொண்டு வந்திருப்பது இந்து மக்களின் மனதை குளிர்விப்பதற்கே ஆகும்.
இந்துக்களின் வாக்கை பெறுவதற்காகவே மத்திய அரசு இது போன்று செயல்பட்டுள்ளது.
வக்பு சொத்தை நிர்வகிப்பதற்கு இந்து மதத்தினரை அமர்த்துவது பேராபத்தை ஏற்படுத்தும்.
இந்து அறநிலையத்துறையிடம் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கவும் முஸ்லிம், கிறிஸ்தவர்களை நியமிக்க வேண்டும்.
முஸ்லிம் மதத்தை குறி வைத்து மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையது அல்ல.
இது இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கையாகும்.
வாக்குகளை மட்டுமே குறி வைத்து ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதிகாரம் மிக வலிமையானது என்று அண்ணல் அம்பேத்கார் கூறியுள்ளார். அது திராவிடர்களின் கையில் இருப்பது மிகவும் கொடுமையானது என சீமான் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>மின்னணு சாதனங்களுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்களித்த ட்ரம்ப்!

