ஈக்வடார் நாட்டின் மிகவும் தேடப்பட்ட போதைப்பொருள் கும்பல் தலைவரான அடால்ஃபோ மாசியாஸ் வில்லாமார், அலியாஸ் ‘பிடோ’, கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மான்டா நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் கீழே அமைக்கப்பட்ட பூமிக்கடித் தளத்தில் மறைந்து இருந்தபோது பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாஸ் சோனெரோஸ் எனப்படும் குற்றக்குழுவின் தலைவராக இருந்த பிடோ, ஈக்வடாரில் அதிக வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதுடன்;, 2023ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் ஃபெர்னாண்டோ வில்லாவிசென்சியோவின் படுகொலைக்கு; பொறுப்பாளியாகக் கருதப்படுகிறார்.
போலீசும் இராணுவமும் இணைந்து நடத்திய 10 மணி நேர தேடுதலின் பின் அவர் கைது செய்யப்பட்டார்.
மூன்று மாடி வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை செய்த போலீசார், கல்லால் மறைக்கப்பட்ட ஒரு தரைச்சுவர் வழியாகக் கொண்டு செல்லும் இரும்பு படிக்கட்டுகள் மூலம் பூமிக்கடித் தளத்துக்குச் சென்றனர்.
அந்த இடத்தில் காற்றோட்ட வசதி, படுக்கை, விசிறி மற்றும் குளிர்சாதன பெட்டியுடன் வசதிகள் மற்றும் வீட்டில் ஜிம்மும் விளையாட்டு அறையும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் குவாயக்வில் நகரத்திற்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உள்ள ‘லா ரோகா’ அதிகபாதுகாப்பு சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது அவர் டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் மற்றும் சாண்டல் அணிந்திருந்ததாகவும், வன்முறையாக மிரட்டப்படுவதைப் போலவே போலீசார் அவரை வாகனத்திற்குள் அழைத்துச் சென்றதாகவும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
ஈக்வடார் ஜனாதிபதி டேனியல் நோபோவா, பிடோவின் கைது பாதுகாப்புப் படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என்றும், இவர் அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
பிடோவிற்கு அமெரிக்காவில் கொகைன் கடத்தல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
2024ஆம் ஆண்டு ஜனவரியில், பிடோ லா ரீஜியனல் சிறையிலிருந்து குறைந்தது இரண்டு காவலர்களின் உதவியுடன் தப்பியோடியிருந்தார்.
இதனையடுத்து நாட்டில் தொடர் சிறை கலவரங்கள், காவலர்கள் கடத்தல், மற்றும் பல்வேறு வன்முறைகள் அரங்கேறின. இதனால் நோபோவா அவசரநிலையையும், அதிகாரங்களுக்கு கூடுதல் அதிகாரங்களும் அறிவித்தார்.
பிடோ சிறையிலேயே லாஸ் சோனெரோஸ் கும்பலை நடத்தி வந்தார்.
முன்னாள் தலைவர் கொல்லப்பட்ட பின்னர், இவர் தலைமை ஏற்க, சிறையிலிருந்தபடியே போதைப்பொருள் கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல குற்றங்களை ஒருங்கிணைத்தார்.
மேலும் மெக்சிகோவின் சினாலோவா கும்பலுடன் கூட்டணி அமைத்து, தலை வெட்டுதல் போன்ற கொடூரங்களை ஈக்வடார் வரை பரப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/3t8qSDSw2gI
பிடோவை மீண்டும் கைது செய்தமை குறித்து ஜனாதிபதி நோபோவா, இது தனது அரசாங்கத்தின் நியாயமான வழிமுறைகளுக்கான வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குற்றவாளிகளை அகற்றும் முயற்சி தொடரும் என்றும், ‘நாடு மீண்டும் நம் கட்டுப்பாட்டில் வரும்’ என்றும் ஜனாதிபதி நோபோவா, எக்ஸ் தளத்தில் பதிவுட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்>ஃப்ளெமிங்டன் பார்க் பகுதியில் துப்பாக்கி சூடு:2 பேர் படுகாயம்!



