உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஒத்த வடிவமைப்புடைய நவீன ஜீப் வாகனம், கண்டி தலைமையக பொலிஸின் போக்குவரத்துப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஜீப்பில் இருவர் பயணித்ததோடு, பொலிஸார் பயன்படுத்தும் வகையிலான இரண்டு வாக்கி-டாக்கிகள் கண்டறியப்பட்டன. முன்பக்க கண்ணாடியைத் தவிர, அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக கருப்பாக மாற்றப்பட்டிருந்தன.
சில சந்தர்ப்பங்களில், இவ்வாகனத்தில் உயர் பொலிஸ் அதிகாரி பயணிப்பதாக எண்ணிய போக்குவரத்து பொலிஸார் சல்யூட் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இந்த ஜீப்பின் உரிமையாளர், கண்டி பகுதியில் செயல்படும் மஹா சொஹொன் பலகாய அரசியல் அமைப்பின் உறுப்பினர் அமித் வீரசிங்கவாக இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரை வாக்குமூலம் அளிக்க வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும், வாகனத்தின் மாற்றங்கள் மற்றும் பயன்பாடு தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்>கஞ்சா பயன்படுத்திய பேருந்து சாரதி கைது.

