பேருவளை நகரில் இன்று (04) பேருந்து சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த போது, களுத்துறை – அளுத்கம வழித்தட தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அவரை களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியபோது, அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
41 வயதான இச்சாரதி சிறிது காலமாக கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பது மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்>2027ற்குள் காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய விசேட குழு நியமனம்.

