வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 558 கிலோகிராம் மாட்டிறைச்சி மாநகரசபையினரால் நேற்று (04-08) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்தில் சுகாதார சீர்கேடான நிலையில் இந்த இறைச்சி கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட இறைச்சி, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்லப்படும் முன்னரே, பொதுமக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாநகரசபையின் பிரதிமுதல்வரும், சபை உறுப்பினரும் இடையீடு செய்து இறைச்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 558 கிலோகிராம் நிறையுடைய இந்த இறைச்சி, சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபோடப்பட்டு மாநகரசபையின் களஞ்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர்கள்மீதும் தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

