நுவரெலியாவில் கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்ததாக கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பணியாற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தகவல் வெளிப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் செயல்பாடுகள், அரசியல்வாதிகளின் ஆதரவு, அவர்களுடனான தொடர்புகள் ஆகியவை படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், குறித்த ஐஸ் தொழிற்சாலை அமைப்பதற்காக 4 மில்லியன் ரூபாய்க்கும் மேலான தொகை செலவிடப்பட்டதுடன், நுவரெலியா பகுதியில் வீடு ஒன்றும் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக சுமார் 2,000 கிலோகிராம் இரசாயனப் பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதையும் படியுங்கள்>உயர் பொலிஸ் அதிகாரி வாகனத்தை ஒத்த ஜீப் கண்டியில் பறிமுதல்

