யாழ்ப்பாணம்இ சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் கஞ்சாவுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 60 கிராம் கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை 15 கிராம் ஹெரோய்ன் மற்றும் 2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சுன்னாகம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
{{CODE4}}
அத்துடன் குறித்த போதைப்பொருளை வாங்க முற்பட்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையஇ சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ராம நாயக்க மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கலும் ஆகியோரின் வழிப்படுத்தலுக்கு அமைவாக வீடொன்று முற்றுகையிடப்பட்டு அந்த இவ்வாறு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலஇ யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கஇ யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹாஇ யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தில்ருக் ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்.
அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

