உள்ளூர்

மகிந்தவின் இளைய புத்தாவுக்கு டுபாய் வங்கியில் 1000 மில்லியன் டொலர்களாம்? ரணிலும் சந்திரிகாவும் அடிபாடு

முன்னாள் ஜனாதிபதியின் இளைய மகன் ஒருவர் துபாயில் வங்கியில் ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை சேமித்து வைத்திருப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகள் ரணிலுக்கும் சந்திரிகாவுக்கும் ஒரே மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை பட்டயக்கணக்காளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த சம்பவம் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதியின் கடைசி மகன் துபாயில் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் மறைத்து வைத்திருப்பதாக 2015 இல் நல்லாட்சி அரசாங்கம் கண்டுபிடித்தது.ஆனால் அரசாங்கம் அதனை மீட்டு நாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை என சந்திரிகா குமாரதுங்க குற்றம் சுமத்தினார்.

நான் எனது கண்ணால் வங்கிகூற்றை பார்த்த போதும் அந்த ஆவணங்களின் மூலப்பிரதிகள் இல்லாததாதல் தங்களால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியவில்லை என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சியில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சிலரை துபாய்க்கு அனுப்பிய போதும் பணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.துபாய் நஷனல் வங்கியிலேயே அந்த பணம் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் இலஞ்ச ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை துபாய்க்கு அனுப்பிவைத்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.ஆயினும் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லையெனவும் வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன துபாயின் வெளிவிவகார அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு முயற்சித்த போதும் பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென ரணில் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்றி விபரங்களை வழங்க முடியாது என அந்த வங்கி தெரிவித்துவிட்டது என ரணில்விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்