யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (13) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராமநாதன் அர்ச்சுனா, ஜெயச்சந்திர மூர்த்தி ராஜீவன், கருணைநாதன் இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், அரச திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது விவசாயம், மீள்குடியேற்றம் சுகாதாரம், மின்சாரம், நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் விதண்டாவாதமாக கேள்வி கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு அரச அதிகாரிகள் கோரியதால் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்ட நிலையில் நிலைமை சுமூகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்>எமது அரசாங்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி

