ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக ரொறன்ரோவில் பெரும்பாக பகுதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் போக்குவரத்து செய்வது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும் எனவே சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
மேலும் வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்> சித்திரை புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது- உதய கம்மன்பில
