உலகம்

ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு தலிபான் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததிலிருந்தே அதன் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை  இரவு பாகிஸ்தான் நிகழ்த்திய வான் வழி தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்திருப்பதாக தலிபான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் பல குழந்தைகளும் பெண்களும் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்டிகா மாகாணத்தின் பர்மல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பாகிஸ்தான் வான் வழியாக தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பதாக தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்தே தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!

https://www.youtube.com/@pathivunews/shorts

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர்
உலகம்

கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு வேலை கனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா இருந்து வருகிறது. இந்நிலையில் கனடாவில் பிராம்டனில் உள்ள உணவு விடுதி ஒன்று, வெய்ட்டர் மற்றும் சர்வர்