உள்ளூர்

மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்!

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை.
அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு தன்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளதாக என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்  வயாவியானில் நடைபெற்றது.

அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர்.
நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது.

கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம்.

பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் இந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது.

அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம்.

அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும்.
அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம் என்றார்.

அதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன.

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம்.
மக்களும் எதிர்பார்த்ததைப் போன்று மீள்குடியமர்ந்தார்கள்.

2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை.

இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி.

இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும்.
நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான்.

தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர்.

எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புவவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்

இதையும் படியுங்கள்>கிளிநொச்சியில் விபத்து குழந்தை பலி தாய் தந்தை படுகாயம்

https://www.youtube.com/shorts/lAsbTHyy2sY?feature=share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்