தென்னிலங்கையிலிருந்து வடமாகாணத்திற்கு அரிசியினை விற்கமுடியாது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட மொத்த – சில்லறை அரிசி வியாபாரிகளுடன் விலை நிர்ணய கட்டுப்பாடு தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (26) யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் ப.ஜெயசேகரம்
அரிசி விலை தொடர்பில் கடந்த திங்கட்கிழமை (09)ம் திகதி இலங்கை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடப்பட்டு உள்ளது.
அரசாங்கம் நிர்ணயம் செய்த விலையில் அரிசியினை வியாபாரிகள் விற்கமுடியாத சூழ் நிலையில் இருக்கின்றனர்.
மொத்த வியாபார விலையாக ஒரு கிலோ வெள்ளைப் பச்சை, அல்லது சம்பா இன அரிசிகள் 215 ரூபாவாக விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.
சில்லறை விலையாக 220 ரூபா நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் அரிசிக்கு போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கும் கூலி எல்லாம் சேர்த்தால் அரசு நிர்ணம் செய்த விலைக்கு அரிசியினை விற்பனை செய்ய முடியது என அவர் தெரிவித்துள்ளார்
அந்தவகையில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவருடன் கதைத்தோம். இதன்போது அவர், எனக்கு இந்த பிரச்சினை விளங்கியுள்ளது.
இதனை அமைச்சு தான் தீர்மானித்துள்ளது.
எனவே அவர்களுடன் நீங்கள் தொடர்புகொண்டு கதையுங்கள் என்றார்
அந்தவகையில் நாங்கள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருடன் தொடர்புகொண்டோம்.
இதன்போது அவரும் இந்த பிரச்சினையை ஏற்றுகொண்டார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஒரு கடித்தத்தை அனுப்பி வைத்த பின்னர் அதன் பிரதியை தமக்கு அனுப்புமாறு கூறினார்.
ஆகையால் நாங்கள் கடிதம் எழுத தீர்மானித்துள்ளோம் என அவர் ஜெயசேகரம் மேலும் தெரிவித்துள்ளார்


