இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்!

2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 2 தடவை பிரதமராக இருந்து நாட்டை வழி நடத்தியவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் இருந்து வந்தார்.

92 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு 9.51 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

அவரது உடல் அன்று இரவு டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அவரது உடல் வீட்டின் முன் அறையில் வைக்கப்பட்டது.

அவர் உடல் இருந்த பெட்டி தேசிய கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது.
நேற்று காலை முதல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்ததியாவின் முக்கிய தலைவர்கள் உட்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதையடுத்து இன்று மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படும் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து நேற்று மத்திய மந்திரிசபை கூடி இரங்கல் தெரிவித்தது.

அதோடு ஜனவரி 1-ந்தேதி வரை ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மேலும் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவித்தது.

நேற்று 10 மணி அளவில் மன்மோகன்சிங் உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் ஊர்வலமாக யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மன்மோகன்சிங் உடலுக்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள்>கிரிப்டோ மோசடி: கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

https://www.facebook.com/yarlc

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என