இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது சமூக வலைதள பக்கத்தில் வன விலங்குகள் தொடர்பான வீடியோ காட்சிகளை அடிக்கடி பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில்,
சதுப்பு நிலத்தில் சேறு மிகுந்த வயல்வெளிக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் காண்டாமிருக குட்டி திணறும் காட்சிகள் உள்ளது.
சுமார் 600 முதல் 700 கிலோ வரை எடை கொண்ட காண்டாமிருக குட்டியை வன ஊழியர்கள் குழுவாக சேர்ந்து மரப்பலகையின் மீது கட்டி தங்களது தோளில் தூக்கி மீட்டு வரும் காட்சிகள் உள்ளது.
வீடியோவுடன் அவரது பதிவில், இது ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்டது. 600 முதல் 700 கிலோ எடையுள்ள இந்த குட்டியை எங்கள் குழுவினர் தோளில் தூக்கி வந்தனர்.
வன விலங்குகள் பாதுகாப்புக்காக சில சமயங்களில் இவ்வாறும் செயல்பட வேண்டி உள்ளது என பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த வீடியோ வைரலான நிலையில்இ வன விலங்குகளை பாதுகாப்பதில் ஊழியர்களின் அர்ப்பணிப்பை பயனர்கள் பலரும் பாராட்டி பதிவிட்டனர். சில பயனர்கள் காடுகளின் அமைதியான பாதுகாவலர்களுக்கு நன்றி என பதிவிட்டிருந்தனர்.
{{CODE1}}
இதையும் படியுங்கள்>ஏகலைவன் போல் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கிறது பா.ஜ.க: ராகுல் காந்தி

