இந்தியா

குளிர்பானத்தில் விசம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த காதலி

இந்தியாவின் கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியிலேயெ இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது

சரோன் ராஜ் (வயது 23), பி.எஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார்

இவர் களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா (22) என்பவரை காதலித்து வந்தார்.

இவர் குமரியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

காதலியின் வீட்டிற்கு காதலன் சென்ற போது காதலியும் அரவது பெற்றோரும் காதலன் குடிப்பதற்கு கசாயமும், குளிர்பானமும் கொடுத்துள்ளனர்

அதன் பின்னர் வயிற்றுவலி அதிகமானதால் சரோன்ராஜ் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை ஜெயராஜன் பாறசாலை போலீசில் கொடுத்த புகாரில், தனது மகனை அவனது காதலியும், பெற்றோரும் சேர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருக்கலாம் என புகார் தெரிவித்திருந்தார்
பின்னர் இந்த வழக்கு கேரள குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

அதன்படி திருவனந்தபுரம் குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு ஜான்சன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.

காதலியின் பெற்றோர் ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனை அறிந்த காதலன் ஷாரோன்ராஜ் அதிர்ச்சி அடைந்து கிரீஸமாவிடம் தன்னை ஏமாற்றி விட்டாயே கதறி அழுதுள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணத்துக்கு ஒப்பு கொண்டதாக கிரீஷ்மா, சரோன்ராஜிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு இடைஞ்சலாக சரோன்ராஜ் வரலாம் என்ற சந்தேகம் கிரீஷ்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை கொன்று விடலாம் என்ற கொடூர எண்ணம் அவருக்கு உருவானது.
அதன்படி காதலி அவரை வீட்டுக்கு வரவழைத்து குளிர்பானத்தில் ரப்பர் மரத்துக்கு அடிக்கும் விசத்தை கலந்து கொடுத்து கொன்றது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இந்நிலையில், குளிர்பானத்தில் விசம் கலந்து காதலனை கொன்ற காதலி கிரிஸமா உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என்று நெய்யாற்றின் கரை கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என