மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி சந்தித்துள்ளார்.
இது குறித்து மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி எக்ஸ் தளத்தில்,
மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மிகச் சிறந்த உறவுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தொடர்ந்து அமைதி மற்றும் பாதுகாப்பு, அரசியல் உட்பட பல விடயங்களை நாங்கள் மிகவும் கலகலப்பான மற்றும் சுவாரஸ்யமாக உரையாடியதாக பதிவிட்டுள்ளார்.
அத்துடன் நேற்று வியாழக்கிழமை (16) இப்ராஹிம் மொஹமட் சோலி முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை சந்தித்துள்ளார்.