நைஜீரிய நாட்டில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது வழக்கம் என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.
நைஜீரிய நாட்டின் பேயெல்சோ மாநிலத்தை சேர்ந்த இளைஞன் டேவிட் என்பவர்
டேவிட் அவரது நிச்சயதார்த்த விழாவுக்கு நைஜீரிய நாட்டின் மற்றொரு மாநிலமான ஐமோ மாநிலத்துக்கு சென்றான்.
உணவு மற்றும் பாட்டு கோஸ்ட்டி செலவு உட்பட திருமண செலவாக மாப்பிள்ளையிடம் 45 லட்சம் ரூபா வாங்கப்பட்டு இருந்தது
கொடுக்கவேண்டிய சீதனமாக 3 லட்சம் நிச்சயிக்கபட்டு இருந்தது.
கல்யாணத்துக்கு முன்பே மணப்பெண்ணை கர்ப்பமாக்கியது தெரிந்ததால் கோபமடைந்த பெண்வீட்டார்கள் வரதட்சிணையை ஐம்பதாயிரம் ரூபாயாக அதிகரித்து 4 இலட்ச்சத்து 50,000 ரூபா வாங்கிவிட்டார்கள்
மணப்பெண்ணின் வீடு தெரியாமல் வேறு வீட்டுக்கு போய், சுற்றி அடித்துக்கொண்டு விழா அரங்குக்கு வந்து சேர்ந்தார் மாப்பிள்ளை.
தாமதமாக வந்ததற்கு 30,000 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டது
அதை கொடுத்தார் மாப்பிள்ளை
மாப்பிள்ளை பிந்தி வந்ததால் மணமகளின் உறவினர்கள் சிலர் கோபித்துக்கொண்டு வீடுகளுக்கு சென்று விட்டார்கள்
; அவர்களை மீண்டும் வரவைக்க 45,000 கொடுக்கவேண்டி இருந்தது.
அதனையும் கொடுத்த பின்னரே திருமணம் நடந்ததாம்.

