முக்கிய செய்திகள்

டிக் டொக் செயலிக்கான அமெரிக்க தடையானது உறுதி செய்யப்பட்டுள்ளது

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

‘டிக் டொக்’ எனப்படும், கைப்பேசி செயலி உலகளாவிய ரீதியில் பிரபலமானது.

இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால் வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி வருகின்றனர்

சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்திய அரசு தடை விதித்தது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது.
இந்த தடை இந்த வார இறுதியில் அமலுக்கு வருகிறது.

இதை எதிர்த்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டொக் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது, பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை எனக்கூறியுள்ளது.

இதனால், இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் இந்த செயலிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல