மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சில செல்வந்த விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
அரசாங்க அதிபரின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாட்டை கண்டித்து விவசாயிகள் ,அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (17) முறைப்பாடு செய்துள்ளனர்.
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்திற்கு சில விவசாயிகள் சென்று அரசாங்க அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
2024, 2025 பெரும்போக செய்கைக்கான முன்னோடிக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி ஆரம்ப கூட்டம் ஒவ்வொரு பிரதேசத்தில் இடம்பெற்று அதற்கான வேலைத்திட்டம் தற்போது அறுவடைக்கு சில காலம் இருக்கும் நிலையில் ஒரு சில விவசாயிகளின் நலன்கருதி அரசாங்க அதிபர் முன்கூட்டி அறுவடை செய்வதற்கான அனுமதி வழங்கியுள்ளார்.
இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ள விவசாயிகள் முதலாளித்துவ வர்க்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர் வேளாண்மையை செய்கின்ற அதே வேளை கூடுதலான வெட்டு இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்வதால் ஏழை விவசாயிகள் ஆகிய தாம் பாதிக்கப்பட்டள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 இலட்சம் ஏக்கருக்கு மேலாக வேளாண்மை செய்துவரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு அறுவடை செய்ய கொடுப்பதன் மூலமாக ஏழை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் .
களத்தில் நின்று விவசாயிகளின் கஸ்ட்ட நஸ்;;டடத்தை பாராத இவர்கள், குளிர் ஊட்டப்பட்ட அறையில் மேசையில் இருந்து எழுதிக் கொண்டு அனுமதி வழங்குவதை ஒரு காலமும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ள் ஏழை விவசாயிகள் தமக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மனித உரிமை ஆணைக் குழுவில் முறைபாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.