முக்கிய செய்திகள்

சீனாவுக்குள் இலங்கை சிக்கவில்லையென்கிறார் ஜனாதிபதி அநுர

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நிராகரித்துள்ளார்

உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம், வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக கருதுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சின்ஹூவாவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையும் சீனாவும் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றன என இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் திசநாயக்க செவ்வாய்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சீனாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமிது.

2004 இல் நான் முதல்தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டேன், 20 வருடங்களிற்கு பின்னர் திரும்பிவரும் நான் பாரிய மாற்றங்களை பார்க்கின்றேன் என திசநாயக்க தெரிவி;த்தார்.

இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் கடந்த 68 வருடங்களாக நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றும் நிலைத்திருக்கும் நட்புறவின் மூலம் சீனாவும் இலங்கையும் தங்கள் மூலோபாய ஒத்துழைப்பு கூட்டாண்மையை ஆழமாக்கியுள்ளன.

இருதலைவர்களிற்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் புதியபட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு,விவசாய ஒத்துழைப்பு, சமூக நலம் ஊடகம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரண்டு நாடுகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.

வறுமை ஒழிப்பு தொழில்நுட்ப முன்னேற்றம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட பல விடயங்களில் இலங்கை தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ளது என தெரிவித்த திசநாயக்க இந்த சவால்களில் இருந்து மீள்வதற்கு சீனா குறிப்பிடத்தக்க அளவில் இலங்கைக்கு உதவமுடியும்என தெரிவித்தார்.

சீன அரசாங்கம் என்பது மக்களை அடிப்படையாக கொண்டது மக்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என்பதை நான் அவதானித்தேன்

இலங்கையின் புதிய அரசாங்கமும் மக்களிற்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டது என இலங்கையின் 56 வயது புதிய ஜனாதிபதி தெரிவித்தார்.

வறுமையை ஒழிப்பதில் சீனாவின் சாதனைகளை பாராட்டிய திசநாயக்க சீனாவின் வறுமை ஒழிப்பு திட்டம் என்பது உலகத்திற்கான முன்மாதிரி ஐக்கிய நாடுகளும் அதனை பாரட்டியுள்ளது சீனாவும் அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன என தெரிவித்தார்.

சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகம் தன்னைமிகவும் கவர்ந்ததாக தெரிவித்த திசநாயக்கஅது சீனா எப்படி கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் சவால்களை எதிர்கொண்டு தற்போது வெற்றியை பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டார்.

இது சீன மக்களிற்கு மாத்திரம் முக்கியமானதில்லை, இது அனைவருக்கும் வளர்ச்சிக்கான புதிய முன்னோக்குகளை வழங்குகின்றது என தெரிவித்தார்.

கடந்த வருடங்களில் புதிய பட்டுப்பாதை திட்ட ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கையும் சீனாவும் நிலையான முன்னேற்றத்தை கண்டுள்ளன.

சீனாவின் நிறுவனங்கள் துறைமுகங்கள் பாலங்கள் மருத்துவநிலையங்கள் மின்னிலையங்கள் போன்றவற்றை அமைத்துள்ளன.

இதன் மூலம் அவை இலங்கையின் உட்கட்டுமானத்திலும் முதலீட்டு சூழ்நிலையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளன.

சீனா இலங்கையின் முக்கிய வர்த்தக சகா, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிற்கு முக்கியமான நாடு,அபிவிருத்தி உதவிகளை வழங்கும் முக்கியநாடு.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய பட்டுப்பாதைதிட்ட ஒத்துழைப்பில் கொழும்பு துறைமுக நகரமும் அம்பாந்தோட்டை துறைமுகமும் மிகவும் முக்கியமானவை.

இந்த இரண்டுதிட்டங்களும் இலங்கைக்கு நீண்டகால அளவில் பெரும் பொருளாதார நன்மைகளை கொண்டுவரும் இதில் சந்தேகமில்லை என திசநாயக்க தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் கொழும்புதுறைமுக நகரம் ஆகியவற்றிற்கு அருகில் கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் என தெரிவித்த திசநாயக்க இதன் மூலம் அதிகளவு முதலீட்டை பெறமுடியும் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என குறிப்பிட்டார்.

சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல