சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:
எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது.
எம்.ஜி.ஆர்இ ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு.
நான் என்ன மிட்டா மிராசாஇ தொழிலதிபரா? சாதாரண தொண்டன்.
கட்சிக்கு உழைத்துஇ விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அ.தி.மு.க.
சட்டசபை தேர்தலில் 522 அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க. அரசுஇ அதில் 20 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லையென எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்
ரேசன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள்.
மகனை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை.
மகளிர் உரிமைத் தொகையை தி.மு.க. தரவில்லை.
நாங்கள் வாதாடிஇ போராடி பெற்றுத் தந்தோம்.
ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை தரப்பட்டது.
வர்தா புயல் மாதிரி ஒரு புயல் வந்தா போதும்… புயலோடு புயலா போயிடும். தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது.
மின்சார கட்டணம்இ வீட்டு வரிஇ தொழிற்சாலை வரிஇ தொழில் வரி உயர்ந்துள்ளது.
மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சிதான் ஸ்டாலின் அரசு.
இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார் என தெரிவித்தார்.

