முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம்.
எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அரச இல்லத்தை அரசுடமையாக்குவோம்.
அவருக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா மாத்திரமே வழங்கப்படும்.
வேண்டுமாயின் மாத வாடகை செலுத்தி அவர் அங்கு வசிக்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் நேற்று (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்