அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்,
ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்கவுக்கு விடுதலை நாள்.
அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது
.உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும்.
இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன்
என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்.’ என்றார்.
எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது.
அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்.
அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகள் கையெழுத்திட உள்ளேன்’ என பதவியேற்ற பின்னர் அவர் தெரிவித்துள்ளார்

