பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது
இதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது.
தோல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஹோமாகம, கொரட்டுவ, களனி,போருவளை போன்ற, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தேர்தல் தொகுதிகளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துள்ளது.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருவதன் அரசாங்கத்தின் மீதான மக்களின் விரக்தி, கூட்டுறவு சங்க தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவருவதை அரசாஙகமும் தற்போது உணர ஆரம்பித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
அதன் பிரதிபலனாகவே அரசாங்கம், 3 வருடங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்து வந்த நிலையில், தற்போது நூற்றுக்கு 20வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்களுக்கு பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலில் தோல்வியடைய ஆரம்பித்தது. ஆனால் இந்த அரசாங்கம் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்று 3 மாதங்களில் தோல்வியடைய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது