நடிகை தேவயானி இதுவரை 100 திரைப்படத்திற்கும் மேல் நடித்துள்ளார்.
90ஸ் களின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இந்நிலையில் நடிகை தேவயானி தற்பொழுது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்தை முதன்முறையாக இயக்கி, எழுதி, தயாரித்துள்ளார் தேவயானி.
இந்த குறும்படம் 17-வது ஜெய்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைக்கான குறும்படம் என்ற விருதை வென்றுள்ளது.
இப்படத்திற்கு இசையை இளையராஜா இசையமைத்துள்ளார்.
படத்தொகுப்பை பி.லெனின் செய்துள்ளார்.
படத்தின் ஒளிப்பதிவை ராஜன் மிர்யாலா மற்றும் ஒலி வடிவமைப்பை லட்சுமி நாரயணன் மேற்கொண்டுள்ளார்.
20 நிமிடமான இந்த குறும் படம்.
ஒரு சிறுமி அவளது தாயை இழந்த பிறகு அவள் எதிர்க்கொள்ளும் சூழலை இப்படம் பிரபளித்து காண்பித்து மிகவும் உணர்ச்சிமயமாக அமைந்துள்ளது.
