அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார்.
மேலும் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஸ்சியா வரவில்லை என்றால் ரஸ்சியா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
‘உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது.
நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது.
ரஸ்சியா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது. எனக்கு புதினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது.
புதினை சந்திப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், ‘அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன்.
பல லட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இது மிகவும் கொடூரமான சூழ்நிலையென அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்

