இந்தியா

நான் பிரபாகரன் பிள்ளையென்கிறார் சீமான்

உண்மையான கம்யூனிசம், உண்மையான முற்போக்கு, சீர்திருத்தம், சமூக நீதி, பெண் உரிமை எல்லாம் பிரபாகரன் பிள்ளைகளிடம் உள்ளது.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியாரிஸ்டுகள் இன்று சீமான் இல்லத்தை முற்றுகையிடும் போரட்டம் நடத்தினர்.

அப்போது சீமான் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டம் குறித்து சீமான் கூறியதாவது:-

அரசியல் அனாதை ஆகிவிடுவேன் என பல அனாதைகளை சொல்கிறது.
32 இயக்கங்கள் சேர்த்து 300 பேரை திரட்ட முடியவில்லை.

ஒரு ஆள் 10 பேரை கூட்டிக்கொண்டு வந்தாலே பெரிய எண்ணிக்கையாக இருந்திருக்கும்.

பாதுகாப்பிற்காக நின்றிருந்த பாதுகாவலர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.
அப்படி இருக்கும் நிலையில், என்னை எங்கே அப்புறப்படுத்த போறீங்க.

உண்மையான கம்யூனிசம் என்னிடம்தான் இருக்கிறது. உண்மையான கம்யூனிசம், உண்மையான முற்போக்கு, சீர்திருத்தம், சமூக நீதி, பெண் உரிமை எல்லாம் பிரபாகரன் பிள்ளைகளிடம் உள்ளது.

சும்மா வெட்டி பேச்சு, வெற்று பேச்சு. வெறும் கூச்சல்.

பெரியார் குறித்து பேசியது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டது.
அங்கே என்னை நிறுத்தும்போது ஆதாரங்களை காட்கிறேன்.

நான் மக்களிடம் இவ்வளவு கேட்டுள்ளேன். இதற்கு ஆதாரம் கேட்டீர்களா.

ஆயிரம் குற்றச்சாட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் கேட்காமல் அதற்கு மட்டும் ஏன் கேட்கிறார்கள்?.

என் வீட்டை முற்றுகையிட்டு வரவில்லையே… பக்கத்தில் இருந்து முடி திருத்தகம் கடையை முற்றுகையிட்டார்கள

பொம்மையைத்தான் எரிக்க முடியும்.

அதில் எனக்கு பெருமைதான். போராடி என்னை முதலமைசர் நற்காலியில் உட்கார வைத்துவிட்டுதான் போவார்கள் என சீமான் தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என