மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி கொள்ளையர்களில் ஒருவரான அர்ஜூன மகேந்திரன் சிங்கபூரில் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார்
அவரை இலங்கைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஜனாதிபதி கையை விரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த முயற்சிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்