கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்புறத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் வியாபாரிகள் எந்தவித அனுமதியும் பொறாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
;கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி நகர வர்த்தகர்களின் வியாபாரத்திலும் அவர்களது வாழ்வாதாரத்திலும் வெளிமாவட்ட வர்த்தகர்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்
எனவே இதற்கான தீர்வினை பெற்றுத்தருமாறும் கோரி இந்த கிளிநொச்சி வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்மை குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து, வர்த்தக சங்கத்தினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
ஆர்ப்பாட்டகரர்களுக்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது