தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
இந்தக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது
இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
பொலிஸாரின் சில இடமாற்றங்களைச் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அண்மையில் பொதுக் கூட்டம் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது ஜனாதிபதிக்கு விளக்கம் கொடுத்துள்ளது
அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது கடமைகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதிக்கு ஆணைக்குழு எடுத்துகூறியுள்ளது
இறுதியில் பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்பதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது