பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என்று ஜனாதிபதி மீண்டும் உறுதிப்படுத்தியதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்
இந்த சட்டத்தை இரத்து செய்வது தொடர்பிலும், மாற்றீடு சட்டம் உருவாக்கம் தொடர்பிலும் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
உப குழுவின் பரிந்துரைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சட்டத்தின் பாரதூரத்தை நாங்கள் நன்கு அறிவோம்.
ஆகவே சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்