15 ஆவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025 தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் (22) யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனம் யாழ்ப்பாணம் வர்த்த கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த கண்காட்சி தொடர்பில் ஏற்பாட்டுக்குழு கருத்து வெளியிடுகையில்.
நலிவுற்றிருந்த வடக்கின் பொருளாதார முன்னேற்றத்தை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி ,
இம்முறையும் 15 ஆவது முறையாக வழமையை விட மிகப் பிரமாண்டமான வகையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கண்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரை காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.30 மணிவரை யாழ் முற்றவெளி மைதானத்தில் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் அதற்கான முறையான அனுமதிகளும் யாழ் மாநகரசபையிடம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் எவரும் வந்து வியாபாரம் என்ற போர்வையில் குப்பைகளை கொட்டும் இடமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தி தரம் மிக்க பொருட்களின் விற்பனை சந்தையாக யாழ்ப்பாணம் சந்தை இருப்பதற்கு இந்த கண்காட்சி வழிசமைத்துக் கொடுக்கும் என நாம் நினைக்கின்றோம்.
குறிப்பாக உள்ளூர் உற்பத்தியாளர்களை வலுப்படுத்தும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தமது உற்பத்திகளை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமையவுள்ளது.
பல்லின வர்த்தக தொழில் துறைக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ள இக் கண்காட்சியில் குறிப்பாக விவசாயம், வைத்தியசாலை, உணவு மற்றும் இயந்திரம், கட்டுமானம்,
இலத்திரனியல் தொடர்பிலான பொருட்கள் சேவைகள் போன்றன கூடங்கள் உள்ளிட்ட 300 இற்கு மேற்பட்ட விற்பனையகங்கள் மிகப்பிரமாண்டமான வகையில் கட்சி படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த முறை இடம்பெற்ற கண்காட்சியின் போது வந்த பார்வையாளர்களை விட இம்முறை 100,000 பேர் வரை கண்காட்சியை பார்வையிட்ட வருவார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்தாகவும் குறித்த ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள சந்தை வாய்ப்புக்களை பெறுவதற்கான சந்தர்ப்பமாக அமையவுள்ள இக் கண்காட்சினை உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர் பயன்படுத்த முன்வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இளம் சமூகத்தினர் தமது தொழில் துறையை மேம்படுத்துவதற்கான சந்தர்ப்பமும்,
தமது தொழில் துறை அறிவை மேம்படுத்துவதற்கும் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பத்திற்கும் இக் கண்காட்சி பெரும் சந்தர்ப்பமாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.
மேலும் உயர் கல்வி பெரும் வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் பல உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள் இக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.
கண்காட்சி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு http://www.jitf.lk என்ற இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>ஜனாதிபதிக்கு பொலிஸ் ஆணைக்குழு நேற்று வகுப்பெடுத்தது

