கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.
அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி காரொன்று பயணித்துள்ளது
அதனையடுத்து வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் மாளிகாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.