மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்தமை வரவேற்கத்தக்கது.
இது உள்ளூராட்சித் தேர்தலுக்கான யுக்தியாக அமைய கூடாது.
தூய்மையான இலக்கை நோக்கிய இலங்கை என்ற அடிப்படையில் பல விடயங்களை மேற்கொள்வதன் ஊடாக இதனை வெற்றிக்கொள்ள முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கை பொறுத்த வரையில் முப்படையினரும் பொதுமக்களின் காணிகளை அபகரித்துள்ளனர்.
தேவாலயங்கள், கோயில்களின் காணிகளும் அபகரிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை திணைக்களங்களின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாததை போன்றே இருக்கின்றன.
வன ஜீவராசிகள் திணைக்களம்,தொல்பொருள் திணைக்களம் ஆகியனவை தனி அரசாங்கங்கள் போன்றே செயற்படுகின்றது.
அது பொதுமக்களின் காணிகளையும் விவசாயிகளின் காணிகளை அபகரிக்கின்றது.
அந்தக் காணிகளை விடுவிப்பதன் ஊடாகவே தூய்மையான இலங்கை திட்டத்தை வெற்றிப்பெற முடியும்.
ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
விவசாயிகள் செல்வந்தர்களல்ல அவர்கள் ஏழ்மை நிலைமையிலேயே வாழ்கின்றனர்.
அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அத்துடன் அவர்களின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையை கொடுக்க வேண்டும்.
இதேவேளை ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், திணைக்களங்கள் தொடர்பிலும் அவதானம் இருக்க வேண்டும்.
சில அதிகாரிகளின் தன்னிச்சையாக செயற்படுகின்றனர்.
அவர்கள் அந்த அதிகாரத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும்.
இந்த விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளாhர்