வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து அவர்களை தாக்கியதுடன் அவர்களின் கைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா – ஓமந்தை யு9 வீதியில் நேற்று (23) முற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு ரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர்கள் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடமிருந்து கைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அவசர இலக்கமான 107 ,ற்கு தொடர்பு கொண்டு முறையிட்டதை அடுத்து உடனடியாக செயல்பட்ட ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த ,ளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப் பிடித்துள்ளனர்.
கைது செயப்பட்ட இருவரும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.