கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு தயாரான நிலையில் இருந்த 10 பேர் சந்தேகத்தின் பேரில் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக பொலிஸாரின் உதவியுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சுற்றிவளைபபின் போது கைது செய்யப்பட்ட 10 பேரும், புதையல் தோண்ட பயன்படுத்திய் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நிலத்தினை ஏறத்தாழ 1000 அடி ஸ்கான் செய்யக்கூடிய ஸ்கானர் இயந்திரமும் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது