அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஸ தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோசித்த ராஜபக்ஸவை நேற்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலுள்ளவாறு அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எனது தம்பியை தங்காலையில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து கொண்டு வந்ததற்கு பொலிஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
ஏனெனில் கடந்த காலங்களை விட இந்த மாதம் தான் அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டில் பதிவாகியுள்ளன.
நாட்டு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் , அந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை.
அரசியல் பழிவாங்களுக்காக எனது தம்பி யோசிதவை அரசு ழகது செய்துள்ளது
நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு குழுவின் தலைவரே தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக பதவி வகிக்கிறார்.
ஆகவே எமக்கு எதிரான செயற்பாடுகள் இனி தீவிரமடைந்தாலும் இருப்பினும் நாங்கள் அச்சமடைய போவதில்லையென நாமல் இராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்