நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் வைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க முடியும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டு கோரப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கமைய புதிய வேட்புமனுவை கோருவதற்கான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதிமன்றத்தில் 4 தரப்புக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புக்கமையவே உள் ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அவர் மெலும் தெரிவித்தள்ளாhர்
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த பின்னர் பாராளுமன்றத்தில் இரண்டாம் மூன்றாம் வாசிப்புக்களின் பின்னர் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
சபாநாயகர் கையெழுத்திட்டதன் பின்னர் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அதன் பின்னரே ஏப்ரலுக்குள் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு கிட்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டள்ளது