இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது.

சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து கொண்டிருப்பதை பார்த்து கவர்னர் ரவி தனது தூக்கத்தை தொலைத்திருக்கிறார்.

அதனை போக்க தி.மு.க. அரசு மீது அவதூறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நிதி ஆயோக் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் 17 இலக்குகளில் தமிழ்நாடு பெரும்பாலானவற்றில் முன்னிலை பெற்றிருக்கிறது.

நிதி ஆயோக்கின் அறிக்கையில் சொல்லப்பட்டது எல்லாம் ஆளுநருக்கு தெரியாதா? இல்லை பிரதமர் மோடி ஆட்சியால் அமைக்கப்பட்ட நிதி ஆயோக் மீதே நம்பிக்கை இல்லையா? ஏன அவர் விடுத்துள்ள அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர் தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கின்றனர்” என பேசிய அவரது உதடுகள்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம், தீவிரவாத அச்சுறுத்தல் என்றெல்லாம் புரண்டு பேசுகின்றன.

பிளவு வாதப் பேச்சை பேசுவதற்கும், மாநில அரசோடு மல்யுத்தம் நடத்துவதற்கும் ராஜ்பவன் ஒன்றும் அரசியல் குஸ்தி களமல்ல என தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மேலும் தெரிவித்துள்ளார்

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த
இந்தியா

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது ஆனால், தீபாவளி தினமான இன்றைய தினம் விதி மீறப்பட்டு மது விற்பனை ஆகா… ஓகோ…. என