இந்தியாவின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளாக உள்ள பத்மபூசன் விருது நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்ம பூசண் விருது அறிவித்ததற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு தன்னுடைய மனப்பூர்வ நன்றியை தல தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அஜித்குமார் வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், இந்திய ஜனாதிபதியிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிகு கவுரவத்திற்காக நான், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கு மட்டும் கிடைத்த பாராட்டு என்றில்லாமல், கூட்டு முயற்சி மற்றும் பலருடைய ஆதரவு ஆகியவற்றிற்கான நற்சான்று என பதிவிட்டுள்ளார்.
