அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு கிழமை முடிவதற்கு முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதில் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை நாடு கடத்தும் ஜனாதிபதி டிரம்ப்-இன் நடவடிக்கை உலக அரசியலில் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் அவமதிக்கப்பட்டதாக பிரேசில் குற்றம்சாட்டியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் கைவிலங்கிடப்பட்டு இருந்தனர் என்று பிரேசில் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இது அவமதிப்பையும் கடந்து, மனித உரிமைகளை மீறும் செயல் என்று பிரேசில் தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி தங்கி வந்த பிரேசில் நாட்டை சேர்ந்த 88 பேர் விமானத்தில் கைவிலங்கிடப்பட்டே நாடுகடத்தப்பட்டுள்னர்
அத்துடன் விமானத்தில் குளிரூட்டி இயக்கப்படவில்லை என்றும், குடிப்பதற்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்று நாடு கடத்தப்பட்டவர்கள் அமெரிக்கா மீது குற்றம்சுமத்தியுள்ளனர்

