மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஸ நேற்று முன்தினம் (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார்.
இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை மோசடியாக வாங்கியமை தொடர்பில் சந்தேக நபரான யோசித ராஜபக்ஸ விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளநிலையிலேயே இன்று காலை சற்று நேரத்திற்கு முன் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவுட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.