முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச வசிப்பதற்கு வீடு இல்லை என்றால் அவருக்கு வீடொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் யார் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் அமைந்துள்ள அவரது சொந்த ஊரானதம்புத்தேகமவில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் மாளிகைகளில் வசிப்பது நியாயமான விடயம் இல்லை,
நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி
நாங்கள் நாட்டை புதியதிசையில் இட்டுச்செல்கின்றோம்,
வெளியேறுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னர் அவர்கள் வெளியேறவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.