இந்திய மீனவர்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கடற்படை விளக்கமளித்துள்ளது
இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நேற்று (27ஸ்ரீ01-2025) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தனர்
எனவே இந்திய மீன்பிடிப்படகுகளை இலங்கையின் ; கடல் எல்லையிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பினை வடக்கு கட்டளைக்குரிய கப்பல்கள் முன்னெடுத்திருந்தன.
சட்ட விரோதமாக மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை மீன்பிடிப்படகுடன் கைது செய்ய முற்பட்ட இலங்கை கடற்படையினர் மீது இந்திய மீனவர்கள் குழுவாக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், கடற்படை வீரர் ஒருவரிமிருந்த துப்பாக்கியையும் அவர்கள் பறிக்க முயற்சித்துள்ளனர்.
இதன் போது கடற்படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்திய மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தியதாக கடற்படையினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது