முக்கிய செய்திகள்

இன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல்

சிறிலங்காவானது ஜே ஆர் ஜனாதிபதி தொடக்கம் அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 37வருடத்தில் பல ஜனாதிபதிகளைக் கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத நிலையிலேயே தமிழ் மக்கள் நினைவேந்தல்களை மட்டுமே செய்துவருகின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தையே உலுக்கிய படுகொலைகளில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் (28) நடைபெற்றது.

மட்டக்களப்பு மகிழடித்தீவு சந்தியில் உள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்,படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

28-01-1987 மற்றும் 12-06-1991ஆகிய காலப்பகுதிகளில் இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மகிழடித்தீவு இரால்பண்ணை மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் 239பேர் படுகொலைசெய்யப்பட்டனர்.

குறித்த படுகொலையில், சிறுவர்கள்,பெண்கள் மற்றும் முதியவர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களை நினைவு கூரும் வண்ணமே, கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுத்தூபி 2,000ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

1987ஆம் ஆண்டு இதே தினத்தில் 33ஆண்டுகளுக்கு முன்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு என்று கூறுகின்ற மகிழடித்தீவு,முதலைக்குடா இறால் வளர்ப்ப பண்ணை,படுவான்கரை பெரு நிலத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட படுகொலையில் 157க்கும் அதிகமானவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்கள்.
அதனைவிட கணக்கெடுக்கமுடியாத வகையில் படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாரிய இனப்படுகொலையொன்று முன்னெடுக்கப்பட்டது.
1987ஆம் ஆண்டு என்பது கிழக்கு மாகாணத்தில் இந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் பெரியளவிலான படுகொலை முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின்னர் இந்தி இலங்கை ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் பின்னர் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் வரையில் இடம்பெற்றது.

கொக்கட்டிச்சோலை படுகொலையென்பது அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

இன்று 38வது ஆண்டினை நினைவுகூரும்போது கூட படுகொலைசெய்தவர்கள் மீதோ அதன் பின்னாளிருந்தவர்கள் மீதோ எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் முக்கிய செய்திகள்

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை

இத்தினங்களில் சீனாவில் பரவி வரும்  HMPV வைரஸ், கடந்த காலங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் நிலைமையாகும் என வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த
உள்ளூர் முக்கிய செய்திகள்

அநுர அரசுக்கு சவால் விடுத்த முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன!

அரசாங்கம் நாட்டை ‘சுத்தம்’ செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல