1980 செப்டம்பர் 11 ஆம் திகதி நிறுவப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையானது 1992 முதல் 2020 வரை கூடவில்லை.
அத்துடன் கடந்த 2020 கூடியபோதும் ஏற்றுமதி துறையின் மேம்பாட்டுக்கான எந்த தீர்மானங்களும் செயல்படுத்தப்படவில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
எனவே, 28 ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 ஆம் ஆண்டில் இந்த சபை கூடி ஏற்றுமதி துறை தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்வது சிறப்பம்சமாகும்.
புதிய அரசாங்கத்தின் ‘வளமான நாடு – அழகான வாழ்வு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருமானத்தை 36 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஏற்றுமதி மேம்பாட்டு அமைச்சர்கள் சபையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.