தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார்.
மாவை விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிராத்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது