பயண முகவர்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு முயன்று ரஸ்சிய படையில் வலிந்து இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பதாக இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவிடத்தில் உறுதியளித்துள்ளார்
இலங்கைக்கான ரஸ்சிய தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனுக்கும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையிலான உத்தியோக பூர்வமான சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்