நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்த கருத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும்.
முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.
அநுராதபுரம் அநுராதபுரத்தில் நேற்று (28-01-2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பெரும்போக நெற்செய்கை அறுவடை நிலையிலும், நெல்லுக்கான உத்தரவாத விலை இதுவரை நிர்ணயிக்ஆரம்பிக்கப்பட்டுள்ள கப்படவில்லை.
இதனால் ஒரு சில பிரதேசங்களில் ஈர நிலையிலான நெல்லை பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் 80 மற்றும் 85 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளார்கள்.
நெல்லுக்கான உத்தரவாத விலையை 140 முதல் 150 ரூபாவாக நிர்ணயிக்குமாறு விவசாயிகள் விவசாயத் துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ள போதும் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
பிரதான அரிசி உற்பத்தியாளர்களின் நியாயமற்ற விலைக்கு நெல்லை விற்பனை செய்யும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தை அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக’ விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் விவசாயிகள் வெற்றிலை போடும் செலவையும் நெல்லுக்கான உத்தரவாத விலையில் சேர்த்துள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகள் வெற்றிலை போடுவது அரசாங்கத்துக்கு தேவையற்றதொரு விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான சிறந்த விலையை நிர்ணயிக்க வேண்டும்.
விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்க நினைக்க வேண்டும்.
அவ்வாறு நினைத்தால் கோட்டபய ராஜபக்ஸவுக்கும், அவரது அரசாங்கத்துக்கும் ஏற்பட்ட கதியே அநுர அரசாங்கத்துக்கும் ஏற்படும் என விவசாயிகள் சங்கம் எச்செரிக்கை விடுத்துள்ளது